25 November 2011

உருண்டோடும் ஒஸ்தி

சிம்பு, ரிச்சா நடித்து வெளிவரும் படம் 'ஒஸ்தி' இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் இப்படத்தை தரணி இயக்கி இருக்கிறார்.
இப்படம் இந்தியில் வரவேற்பை பெற்ற 'தபாங்' படத்தின் ரீமேக்காகும், படத்துக்கு தமன் இசையமைத்துள்ளர்.
'ஒஸ்தி' படத்தில் மல்லிகா ஷெராவத்துடன், சிம்பு ஆட்டம் போட்ட குத்தாட்ட பாடல்தான் படத்தில் பெரிதாக பேசப்படும் என்று படக்குழு வட்டாரத்தில் சொல்லி வருகிறார்கள்.
தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்பட்ட ஒஸ்தி மீண்டும் ஒரு தேதி மாற்றத்தை சந்தித்திருக்கிறது.

தீபாவளி, அடுத்து நவம்பர் 25, அதையடுத்து டிசம்பர் 2... சொன்ன தேதிகள் வந்து‌க் கொண்டேயிருக்கின்றன. ஆனால் ஒஸ்தி மட்டும் வரவில்லை. இப்போது மீண்டும் மாற்றம்.

டிசம்பர் 8 ஆம் தேதி திரைக்கு வரும் என்கிறார்கள். இதற்கு மேலும் ஒஸ்தி உருண்டோடாது என்று நம்புவோம்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews